Friday, 11 July 2014

தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான்





இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மேலும் தெரிந்து கொள்ள

Thursday, 10 July 2014

ஆரோக்கியப் பெட்டகம்: பழங்களின் மருத்துவ குணங்கள்

ஆரோக்கியப் பெட்டகம்: பழங்களின் மருத்துவ குணங்கள்: பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கும் தீர்வு உள்ளது....

Sunday, 6 July 2014

ஆரோக்கிய ரெசிபி: கேரட்,கேரட் அல்வா,கேரட் - வெந்தயக் கீரை பொரியல்,கேரட் ஜூஸ்



தினமும் குடியுங்கள் கேரட் ஜூஸ்!



கேரட்டை கழுவி, தோல் சீவாமல் அரைத்து, சர்க்கரை சேர்க்காமலும், வடிகட்டாமலும் அப்படியே குடிக்க வேண்டும். தினம் கேரட் ஜூஸ்  குடிப்பவர்களுக்கு....

ரத்த சோகை சரியாகி, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை சீராகும். சளியும் தொண்டைக்கட்டும் குணமாவதுடன், ஆஸ்துமாவுக்கு  காரணமான தொற்றைத் தவிர்க்கும். கேரட்டுடன், கொஞ்சம் கொத்த மல்லியும் சேர்த்து அரைத்துக் குடித்தால், எப்பேர்பட்ட மலச்சிக்கலும் சரியாகும். கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் நாட்களிலும் கேரட் ஜூஸ் குடிப்பதால், உடலிலுள்ள அதிகப்படியான தண்ணீர் தேக்கம்  சரியாகி, உடல் லேசான  உணர்வு பெறும். கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கேரட் ஜூஸ் குடிப்பதால், பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஆபத்துகூட குறையுமாம்.  குழந்தையின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர், தினமும் கேரட் ஜூஸ் குடித்தால், அவர்களது இனப்பெருக்கத் திறனானது மேம்படும்.  புகைப்பிடிப்பவர்களும், புகைப்பிடிப்பவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டியவர்களும் தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், புகையினால்  உண்டாகும் ஆபத்திலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள